முகப்பு :: நமது சங்கம் ::  முன்னாள் தலைவர்கள் :: நிர்வாகக்குழு உறுப்பினர்கள் :: செயற்குழு உறுப்பினர்கள் :: மாவட்ட சங்கங்கள் :: கிளைச்சங்கங்கள் ::  தொடர்புக்கு

நமது சமுதாயம் ::  நமது குலக் கொடி ::  நமது உறுதி மொழி :: நமது சங்க விதி முறைகள் :: செங்குந்தமித்திரன் :: செங்குந்தர் மாளிகை ::  வள்ளல் சபாபதி பள்ளி

 

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் தோன்றிய  வரலாறு
 

செங்குந்தர் பேரரசு

செங்குந்தர்கள் செங்கோல் ஒச்சிய காலத்தில், காசி முதல் கன்னியாகுமரி வரை 72 நாடுகளில் ஒற்றுமையுடனும் புகழுடனும் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். அந்த 72 நாடுகளையும்

(1) சிவபுரம் (2) தொந்திபுரம் (3) விரிஞ்சிபுரம் (4) சோளிங்கபுரம்

என 4 வரிசை நாடுகளாகப் பிரித்து இருந்தனர். ஒவ்வொரு திசை நாடுகளையும் செங்கடப்ப மாலை அணிந்து சிறு மன்னர்கள் நீதி நெறி தவறாது சிறப்பாக ஆண்டு வந்தனர். ஒவ்வொரு திசை காடும் 18 நாடுகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு நாடும் 17 கிளை நாடுகளைக் கொண்டதாக இருக்கும். சேலம் கிளை நாடு, தொந்திபுரம் திசை நாட்டிலும், தருமபுரி, பவானி, தாரமங்கலம், திருச்செங்கோடு, நாமக்கல் கிளை நாடுகள் விரிஞ்சிபுரம் கிளை நாட்டிலும் சேர்ந்து இருந்தன.

செங்குந்தர்கள் வாழும் ஒவ்வொரு ஊரிலும், தங்களுக்குள் நாட்டாண்மைக்காரர் அல்லது பெரிய தனக்காரர் எனப்படும் ஊர்த்தலைவருக்குக் கட்டுப்பட்டு, தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளை, ஊர்த்தலைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் காரியக்காரரும் வழங்கும் தீர்ப்புகளை மகிழ்ச்சியுடன் ஏற்று, நெறிமுறையுடன் வாழ்ந்து வந்தனர்.

வீரவாகுத் தேவருக்கும் புஷ்பகந்திக்கும் பிறந்த அனகன் எனும் மன்னன் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாக்க கொண்டு செங்கோல் ஓச்சி வந்தான். 72 நாடுகளுக்கும் தலைமை நாடாக, காஞ்சி மாநகரை வைத்துக்கொண்டு அனகன் சிறப்பாக நீதிபரிபாலனம் செய்து வந்தான்.

ஊர்த்தலைவர் அளித்த தீர்ப்பில் மனநிறைவு பெறாது மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சம்மந்தப்பட்ட திசை நாட்டுத் தலைவர்களுக்கும், அதற்கும் மேல் இறுதியாக உச்ச நீதிமன்றமாக இருக்கும் தலை நாடாகிய காஞ்சி மாநாட்டுத் தலைவருக்கும் மேல் முறையீடு செய்து நீதி வழுவாத நல்ல தீர்ப்பினை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

மன்னர்கள் காலம் போனபின்பு, இறுதியாக காஞ்சி மாநாட்டுத் தலைவர் என்பவர், 72 நாடுகளுக்கும் தலைவராக ஆண்டவர் என்ற பட்டப் பெயருடன், ஆண்டவர் குமாரசாமி முதலியார் என்பவர் காஞ்சிபுரம் கச்சபேசர் ஆலயத்தின் மண்டபத்தில் இருந்து ஆட்சிபுரிந்து வந்தார். அவர் 1911ல் இயற்கை எய்தி விட்ட பின்பு செங்குந்த சமுதாயத்தின் தலைமை பீடம் வெற்றிடமாகி விட்டது.

தலைமைபீடத்தை நிரப்பும் முயற்சி

தற்காலிகமாக, காஞ்சிபுரம் நகராட்சி தலைவராக இருந்த திரு. ம.த. சாமிநாத முதலியார் அவர்கள் ஆண்டவர் பொறுப்பை ஏற்றார்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, அரசியல் தலைநகரான சென்னையில், செங்குந்தர்கள் எலலோருக்கும் தலைமையான தலைச்சங்கத்தையும் அதன் கிளைகளாக செங்குந்தர்கள் வாழும் எல்லா ஊர்களிலும் கிளைச் சங்கங்களையும் தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காஞ்சிபுரம் வண்ணக்களஞ்சியம் நாகலிங்க முதலியார் அவர்கள் (1926ல் துறவறம் பூண்டு நாகலிங்க முனிவர் ஆனார்) அப்போது மயிலாப்பூரில் அக்கவுண்டன்ட் ஆபீஸ் கண்காணிப்பாளராக இருந்த கச்சபேசர் ஆலய மண்டபத்தில் செங்குந்த பெருமக்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அக்கூட்டத்தில் ஒரு செங்குந்தர் சங்கம் நிறுவப்பட்டு அதன் தலைவராக காஞ்சிபுரம் ம.த.சாமிநாத முதலியாரும், செயலாளராக சென்னை கா. வேலு முதலியார் அவர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அக்கூட்டத் தீர்மானம் அவர்களிருவரும் செங்குந்தர்கள் பெருமளவில் வசிக்கும் பல்வேறு ஊர்களுக்கும் சென்று, இதுபற்றி கலந்துரையாடிவிட்டு வந்தனர்.

1913 டிசம்பரில் அதே ஆலயத்தில் முன்பைவிட அதிக அளவிலாள, சிறப்பான செங்குந்தர்கள் கூட்டம் கூட்டப்பட்டு, மேற்படி சங்கத்தைப் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதிர்பாராத விதமாக செயலாளர் சென்னை வேலு முதலியார் நாக்பூருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டதால், அந்த சங்கம் நீடித்து வேலை செய்யவில்லை.

09,06,1918ல் வண்ணக் களஞ்சியம் நாகலிங்கம் முதலியார் சென்னையில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் ஒன்றை நிறுவுவதற்கும், சென்னை மாகாணம் (கேரளா, ஆந்திரா உட்பட) எங்கும் உள்ள செங்குந்தர்கள் மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கும் சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீசுவரர் ஆலயத்தில் செங்குந்தர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் ஒரு சங்கம் நிறுவப்பெற்று உத்தேச மாநாட்டிற்கான வரவேற்புக் குழு ஒன்று அமைக்கப்பெற்றது.

பின்னர், காஞ்சிபுரத்திலும், கொல்லங்கோட்டிலும் செங்குந்தர்கள், கூட்டம் கூடி ஆலோசனை செய்யப்பெற்றது. அடுத்து, நாகப்பட்டினத்திற்கருகில் உள்ள பொருள் வைத்தசேரியில் நாகை நல்லமுத்து முதலியார் தலைமையில் ஒரு மாநாடு கூடிற்று. அதற்கு காஞ்சி நாகலிங்க முனிவரும் திருவாரூர் வள்ளல் சபாபதி செங்குந்தரும் சென்றிருந்தனர். இம்மாநாட்டில் சென்னையில் செங்குந்த சமுதாயத்திற்காக உழைக்க்க கூடிய ஒரு சங்கத்தை நிறுவி, பத்திரிக்கை ஒன்றையும் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

செங்குந்த மகாசன சங்கம் தோன்றியது

மேற்கூறிய முயற்சிகள் பயனாக, பிரபவ ஆண்டு சித்திரை மாதம் 17 ஆம் நாள் 29-04-1927 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கோவிந்தப்ப நாய்க்கன் வீதியில் உள்ள செங்குந்தர் மகால் என்னும் மண்டபத்தில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் தோன்றலாயிற்று.

 

 

 

 

 

 

 

 
 

2015 Sengunthamithiran. All Rights Reserved

Best viewed with Internet Explorer Ver IE 6.5 & above or Google Chrome, Mozilla Firefox with a resolution of 1024*768. Please upgrade your browser.