வள்ளல் சபாபதி பள்ளி
திராவிட முன்னேற்ற கழகத்திடமிருந்து அதன் தலைவர்
திரு. பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து, சென்னை சேத்துப்பட்டில் ஆரிங்டன்
சாலையில் 35 ஆம் எண் உள்ள காலி மனையை, தென்னிந்திய செங்குந்த மகாஜன
சங்கத்தினரால் ரொக்கம் ரூ.35000 கொடுத்து 23-09-1960-ல் கிரயத்திற்கு
வாங்கப்பட்டது. (பத்திரப் பதிவு எண்.3611-1960) இதற்கு பேருதவி புரிந்தவர்
காஞ்சி மணிமொழியார் ஆவார். அவ்விடத்தில் வள்ளல் சபாபதி மாணவர் இல்லம் கட்ட
07-07-1985-ல் கால்கோல் விழா நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர்
07-07-1985-ல் வள்ளல் சபாபதி மெட்ரிகுலேஷன் பள்ளி தொடங்கப் பெற்று, இன்று
பன்னிரண்டாம் வகுப்பு வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பலமுறை தலைமைச் சங்க செயற்குழுவில் இந்த இடத்தை
விற்கலாம் என்றும் 99 வருட குத்தகைக் விடலாம் என்றும் விவாதங்கள் வந்தபோது
இந்த இடத்தை எக்காரணம் கொண்டும் விற்கக் கூடாது என்று கடலூர் மாவட்ட செங்குந்த
மகாஜன சங்கம் தான் முதன்முதலாக தீர்மானம் கொண்டு வந்தது. மேலும் வள்ளல் சபாபதி
மெட்ரிகுலேஷன் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு மாநிலத்திலேயே முதலாவதாக ரு.18,500
நிதி வசூல் செய்து கொடுத்து கட்டிடம் துவக்க பேருதவி செய்தது. இன்று இந்த பள்ளி
நமது சங்கத்தின் மாபெரும் சொத்தாகவும், பெரும் நிதியை அள்ளிக் கொடுக்கும்
நிறுவனமாகவும் நமது சமூகத்திற்கு கெளரவம் சேர்க்கும் நிறுவனமாகவும் விளங்கி
வருவது குறிப்பிடத்தக்கது.
|